உலகில் உள்ள பல உயிரினங்கள் அழிவின் விழும்பில் உள்ளது அப்படி அழிந்து வரும் வன உயிரினங்களை காப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்சிகள்
நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பிரான்சில் உயிரினங்களை காக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்விளக்குகளைக் கொண்டு பல்வேறு உயிரினங்களின் வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. உலக வன உயிரின பாதுகாப்பு அமைப்பு பாரிஸ் நகரில் உள்ள தாவரவியல் பூங்காவில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
பூங்காவின் நுழைவு வாயில் ஒரு சுறா மீனின் வாயில் நுழைந்து செல்வது போன்ற வளைவு அமைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தவளைகள், ஆமைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்கள், பாம்புகள், யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், யானைகள் என பல்வேறு உயிரினங்களை ஒரு மிருகக்காட்சி சாலையே போன்று வண்ண விளக்குகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்வையாளர்களை கவரும் வகையில் அந்த காலத்தில் வாழ்ந்த டைனோசர்களும் மின்விளக்குகளால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு – 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக உயர்த்திய ஈஷா வளர்ந்த பாரதத்திற்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு – பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் பாராட்டு
ஜனவரி மற்றும் ஜூன் 2025 க்கு இடையில் 36,194 வாகனங்களை விற்பனை செய்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா சாதனை
தமிழ்நாடு அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வை விளக்கிக் கொள்ள வேண்டும் ! தமிழக தொழில் அமைப்புகளின் வேண்டுகோள்!!
ஜெர்மனியில் சத்குருவிற்கு வழங்கப்பட்ட “ப்ளூ டங்” விருது
இந்திய போட்டித் துறை ஆணையம் (CCI), ஆசியான் பேயிண்ட் கம்பெனிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவு