• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலையோரம் நாம் பார்க்கும் அழகு வண்ணங்களுக்கு பின் இருக்கும் வறுமை !

December 20, 2018 ல.கார்த்திக் ராஜா

நாம் அன்றாடம் அலுவலகம், கல்லூரிக்கு பயணம் செய்யும் போது சாலை ஓரங்களில் பல வண்ணங்களில் கண்ணை கவரும் வகையில் அழகான கைவினைப் பொருட்களை பலர் விற்று வருபவர்களை நாம் பார்த்திருபோம். கடவுளின் சிலைகள், விலங்குகள், பறவைகளின் சிலைகள் வீட்டு அலங்கார பொருட்கள், பூந்தொட்டிகள் என கைகளால் மிக நேர்த்தியாக செய்யப்படும் அப்பொருட்களும் அதன் நிறங்களும் நம்மை வெகுவாக ஈர்த்திருக்கும். அந்த வண்ணங்களே நம்மை வாங்க தூண்டும். பல வண்ணங்கள் நிறைந்த இந்த பொருட்களை உருவாக்கினாலும் அதனை விற்பவர்களோ சாதாரண அழுக்கு உடையில் தான் இருப்பார்கள்.

இத்தொழிலில் பெரும்பாலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிக அளவில் ஈடுபடுகின்றனர். அவர்களில் ஒருவர் தான் தக்தீர் ஹுசைன்(40). உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் கைத்தொழில்களில் ஒன்றான பூந்தொட்டிகள் செய்யும் தொழிலை தன் மனைவி யாசிம்முடன்(36). கோவை குறிச்சி குளம் பகுதியில் தனியார் இடத்தை வாடகைக்கு எடுத்து குடும்பத் தொழிலாக செய்துவருகின்றார். இத்தொழிலை தக்தீர்ஹுசைன் குடும்பதுடன் பத்து வருடமாக செய்துவருகிறார்.

இது குறித்து தக்தீர்ஹுசைனிடம் பேசினோம்,

எனது சொந்த ஊர் உத்திரபிரதேசம். அங்கு விவசாயம் தொழில் செய்து வந்தேன். விவசாயத்தில் பெரிதும் வருமானம் கிடைக்காததால் அந்த தொழில் விட்டுவிட்டேன். எனக்கு திருமணம் ஆனா பின் வேறு வழியின்றி தமிழ்நாட்டிற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் வந்தேன். இங்கு வந்து ஒருவருடமாக கட்டிட வேலை செய்தேன். அதில் ஓரளவு பணம் கிடைத்தது. அதை வைத்து சொந்தமாக தொழில்தொடங்க முடிவு செய்தேன். எங்கள் ஊரில் நான் சில நாட்கள் கைவினைப்பொருட்கள் செய்து வந்தேன். அந்த அனுவபத்தை வைத்து கைவினைப் பொருட்களான பூந்தொட்டியை செய்து விற்க முடிவு செய்தேன். குறிச்சி குளத்தில் அருகில் முதலில் பூந்தொட்டி செய்து விற்று வந்தேன். தினமும் 1000 முதல் 2 ஆயிரம் வரை வியாபாரம் நடந்து வந்தது. ஆனால், அரசு அங்கு தொழில் நடத்தக்கூடாது என எங்களை காலி செய்ய சொல்லிவிட்டார்கள். பின்னர் மாதம் 5 ஆயிரம் ரூபாய் வாடகையில் தனியார் இடத்தை வாடகைக்கு எடுத்து பூந்தொட்டி செய்து வந்தேன். இங்கு வந்து ஒரு மாதம் போதுமான அளவு வியாபாரம் இருந்தது. அதன்பின் நாட்கள் செல்ல செல்ல வியாபாரம் குறைந்து கொண்டே வருகிறது.

மழை பெய்யும் நாட்களில் பூந்தொட்டிகள் செய்ய இயலாது. இதனால் மிகவும் வறுமையான சூழலில் தான் இருப்போம். மாதம் 500 தொட்டிகள் வரை விற்று வந்தது தற்போது 200 க்கும் குறைவாகவே விற்று வருகிறது. இதனால் அரசு நல்ல வியாபாரம் நடைபெறும் இடத்தில் எங்களுக்கு கடை போடுவதற்கு அனுமதி அளித்தால் மீண்டும் நல்ல வியாபாரம் கிடைக்கும். வியாபாரம் இப்படியே சென்றால் மீண்டும் பழையபடி கட்டிட வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் தான். இல்லைஎன்றால் உபி சென்று விடலாம் என முடிவு செய்துள்ளேன். என வேதனையுடன் தெரிவித்தார்.

இவரது கடையில் நாற்பது ரூபாய் முதல் ஏழாயிரம் ரூபாய் வரையில் பூத்தொட்டிகள் விற்பனைக்கு உள்ளது. தனக்கு தேவையான சிமென்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் மாதம் இருமுறை வாங்கி வருகிறார். நாம் தினமும் சாலையோரம் அழகாக ரசிக்கும் இந்த தொட்டிகளுக்கு பின்னும் பல கதைகள் மறைந்து கிடக்கிறது.

மேலும் படிக்க