• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் குளத்தின் நீரோட்டம் 600 குடும்பங்களின் உயிரோட்டம் !

December 20, 2018 வை.கெளதம்

திணறும் போக்குவரத்து நெரிசல், பிரதான வழிபாட்டுக்கோவில்கள், ஓயாத மக்கள் கூட்டம் போன்றவற்றை தனியொரு அடையாளமாகக் கொண்டு திகழும்பகுதி உக்கடம். இப்பகுதியில் கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ளது உக்கடம் பெரிய குளம். இந்த குளத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு 600 மீனவர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றதாம். இங்கு மீன்பிடிக்கும் மீனவர்கள் அரசாங்கத்தை சாராமல் தங்களுக்குள் தங்களுக்கென ஒரு வாரியம் அமைத்து குளத்தில் மீன்பிடிப்பதும், அதை பராமரிப்பதும் போன்ற பணிகளைச் செய்து வருகின்றனர்.

மீனவர் செல்வராஜ் கூறுகையில்,

உக்கடம் குளம் மன்னர் திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் இருந்து, அதாவது 1752-க்கு முற்பகுதியிலிருந்து உள்ளது. இந்த வாரியம் ஏறத்தாழ 200 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த குளத்தில் தினமும் காலை 5 மணிமுதல் 11 மணி வரையிலும் பின்மதியம் 2 மணிமுதல் 5 மணி வரையிலும் மீன்பிடித்தொழில் நடைபெறுகிறது. இந்நேரத்தை தாண்டி மீன் பிடித்தால் அவர்களை ஒருமாத காலம் நீக்கம் செய்து விடுவோம். நாங்கள் படகு, பரிசல் என எதையும் பயன்படுத்தாமல் சாக்குமூட்டைக்குள் தெர்மாகோல், பஞ்சுபோன்ற நீரில் மூழ்காத பொருட்களையிட்டு அதன் மேல் அமர்ந்து மீன் பிடித்து வருகின்றோம். வருடம் இருமுறை குளத்தில் மீன்குஞ்சுகளை விடுவோம். இதற்கு தேவைப்படும் முதலீட்டை சங்க உறுப்பினர்கள் மாதம் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த தொழிலின் மூலம் ஒவ்வொரு மீனவரும் அன்றாடம் ரூ.200 முதல் ரூ.1000 வரையிலும் சில சமயம் ஏதுமில்லாமல் ஏமாற்றமும் பெறுகின்றனர் என்றார்.

மீனவர் ராஜன் கூறுகையில்,

குளத்தில் நீர் வறண்டு காயும் சமயங்களில் நாங்கள் மூட்டை தூக்குவது, கட்டிடம் வேலை உள்ளிட்ட வேலைகளுக்கு சென்று விடுவோம். நீர் வந்து மீன்வளம் சேர்ந்ததும் மீண்டும் எங்கள் சொந்த தொழிலான மீன்பிடித்தலுக்கே வந்துவிடுவோம். தினமும் வாரியத்திலுள்ள மீனவர்கள் 10 பேர் குளத்தை காவல் காக்கின்றனர். ஏனெனில், சங்கத்தின் உறுப்பினரல்லாத மற்ற மீனவர்கள் இந்த ஏரியில் வந்து மீன்பிடிப்பதை தடுக்கவும் தற்கொலை போன்ற அசம்பாவிதங்களை தடுக்கவும் தான் என்றார்.

உக்கடம் குளம் மட்டுல்லாது இதேபோல் கோவையில் உள்ள பல்வேறு குளங்களை நம்பி பல்லாயிரக்கணக்கான குடும்பங்களும் கோவையில் வாழ்ந்து வருகின்றனர். எனினும் அரசு குளங்களை சீரமைத்து தூய்மைப்படுத்தி, கழிவுகள் கலக்காமலும் மாசடையாமலும் பாதுகாக்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க