• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உயர்நீதிமன்ற உத்தரவால் பொன்.மாணிக்கவேல் தப்பித்து வருகிறார் – அமைச்சர் சி.வி. சண்முகம்

December 20, 2018 தண்டோரா குழு

உயர்நீதிமன்ற உத்தரவால் பொன்.மாணிக்கவேல் தப்பித்து வருகிறார் என அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியுள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேலுக்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் புகார் அளித்து உள்ளனர்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம்,

பொன்.மாணிக்கவேல் திட்டமிட்டு உள்நோக்கத்தோடு, யாரோ ஒருவரின் கைப்பாவையாக செயல்படுகிறார். பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் என்று யார் சொன்னது? அரசு அதிகாரிகள் உள்நோக்கத்தோடு செயல்படக்கூடாது.

பொன்.மாணிக்கவேல் இதுவரை எத்தனை சிலைகளை கண்டுபிடித்துள்ளார், எத்தனை பேரை கைது செய்துள்ளார் என்பதை தெரிவிக்க வேண்டும். நேர்மையான அதிகாரி என்றால் குற்றச்சாட்டுகளுக்கு பொன்.மாணிக்கவேல் பதில் தர வேண்டும். பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவால் பொன்.மாணிக்கவேல் தப்பித்து வருகிறார் என்றார்.

மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது ஆளுநரின் கையில் தான் உள்ளது.கட்சிக்கு விரோதமாக யார் செயல்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு துணை முதல்வரின் தம்பி ஓ.ராஜா நீக்கம் ஓர் உதாரணமாகும் என கூறியுள்ளார்.

மேலும் படிக்க