• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி – ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

December 19, 2018 தண்டோரா குழு

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்துவந்தது. இதில்,மக்கள் ஜனநாயகக் கட்சியின் மெஹபூபா முஃப்தி முதல்வராக ஆட்சி செய்து வந்தார்.இதற்கிடையில், காஷ்மீரில் நிலவும் சூழல் காரணமாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும், பயங்கரவாதம், வன்முறை, பத்திரிகையாளர் சுடப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் கூட்டணியை பாதித்தன. இதனால், ஜம்மு – காஷ்மீர் அரசுக்கு பா.ஜ.க அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது. இதனால், அம்மாநிலத்தில் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. பின்னர்மெகபூபா முஃப்தி பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார். இதனையடுத்து ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 6 மாதங்களாக ஆளுநர் ஆட்சி அமலில் உள்ளது. அந்த ஆட்சி இன்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, நாளை முதல் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக் பரிந்துரை செய்திருந்தார்.இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பின்னர்.தனது பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் உத்தரவில் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டார்.ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

மேலும் படிக்க