• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துணை முதல்வர் ஓபிஎஸின் தம்பி ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்!

December 19, 2018 தண்டோரா குழு

துணை முதல்வர் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்

பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவர் ஓ. ராஜா. இவர் துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் தம்பியாவார். இன்று காலை இவர் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவராக தேர்வானார். இந்நிலையில் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ஓபிஎஸ்-ஈபிஎஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“கழகத்தின் கொள்கை-குறிக்கோகளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.ராஜா முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க