• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரஜினியின் ஆஸ்தான மேக்கப் மேன் முத்தப்பா காலமானார்

December 18, 2018 தண்டோரா குழு

ரஜினியின் ஆஸ்தான மேக்கப் மேன் முத்தப்பா இன்று காலமானார். அவரது உடலுக்கு ரஜினி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் சினிமாவில் 70 வருடங்களை கடந்த பழைமையான தாரிப்பு நிறுவனம் ஏவிஎம் . இந்நிறுவனம் மூலம் ஏராளமான படங்களை தயாரித்த ஏவி.மெய்யப்பச் செட்டியார் மூலம் தமிழ் மேக்கப் மேனாக அறிமுகமானவர் முத்தையா. இவருக்கு ஏவிஎம் முத்தப்பா என்ற செல்ல பெயரும் உண்டு. ‘ஏவிஎம்’ முத்தப்பா என்றால் தென்னிந்திய சினிமாவில், தெரியாதவர்கள் இருக்க முடியாது. ‘பராசக்தி’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு முதன்முதலாக ஒப்பனை செய்த இவர், கமலஹாசனின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா’ உள்பட பல படங்களில் ஒப்பனையாளராகப் பணியாற்றியவர்.

60 ஆண்டுகளாக ஹீரோ-ஹீரோயின்களுக்கு மேக்-அப் போட்டு ஜொலித்த முத்தப்பா, எம் ஜி.ஆர்., சிவாஜி, ரஜினிகாந்த், கமலஹாசன், ராஜ்குமார் போன்ற முன்னணி கதாநாயகர்கள் முதல் தற்போது உள்ள திரிஷா வரை பலருக்கும் மேக்கப் மேனாக பணியாற்றியுள்ளார். ஒரு கட்டத்தில் ரஜினியின் பர்சனல் மேக்-அப் மேனாக மாறி அவரிடம் மட்டுமே பணியாற்றத் துவங்கினார். அத்துடன் ரஜினி நடித்த சில படங்களில் நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்கவும் செய்தார். இவரை பற்றி ஒப்பனைகாரன் என்ற புத்தகமே வெளிவந்துள்ளது.

இந்நிலையில், புகழ்பெற்ற மேக்-அப் மேன் முத்தப்பா இன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு திரையுலைகைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் படிக்க