• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நடிகர் ரஜினிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து

December 18, 2018 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த் மீது சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கடந்த 2012ல் ரஜினிகாந்த் பெயரைச்சொல்லி பைனான்சியர் போத்ராவிடம் இயக்குநர் கஸ்தூரிராஜா 65 லட்சம் கடன் பெற்றதாகவும் கடன் தொகையை காசோலையாக திருப்பிக் கொடுத்தபோது வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு எதிரான பைனான்சியர் போத்ரா தொடர்ந்த செக் மோசடி வழக்கில், ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில் தன் பெயரை தவறாக பயன்படுத்தி போத்ரா பணம் பறிக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனால்,ரஜினிகாந்த் மீது ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ரஜினிக்கு எதிராக போத்ரா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் கஸ்தூரிராஜாவுக்கு எதிராகதான் வழக்கு தொடர்ந்ததாகவும், ரஜினிகாந்த் தனக்கு எதிராக தவறான தகவல்களை கூறுவதாகவும் போத்ரா தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவதூறு வழக்கில் வரும் ஜூன் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் ரஜினி காந்த்துக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில் தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதிகள், போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க