• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாமக்கலில் ஒரு கிராமமே ஒரு குடும்பத்திற்கு எதிராக புகார் !

December 17, 2018 தண்டோரா குழு

நாமக்கல் மாவட்டம் அருகே குடித்து விட்டு ஆயுதங்களுடன் தகராறில் ஈடுபடுவதாக ஒரு குடும்பத்திற்கு எதிராக ஒரு கிராமமே காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மலைவேப்பன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் என்பவருடைய இரு மகன்களான செந்தில் மற்றும் சங்கர் ஆகியோர் தங்களது உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு தினமும் குடித்து விட்டு ஊர்க்காரர்களுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. கையில் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ஊர் மக்களை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அப்பகுதியில் உள்ளவர்கள் பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். இந்நிலையில், கிராம மக்கள் அனைவரும் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்ற இவர்களை கைது செய்ய வலியுறுத்தி புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும் படிக்க