• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு உதகையில் நடைப்பெற்ற சாண்டாகிளாஸ் ஊர்வலம்

December 17, 2018 தண்டோரா குழு

உலகம் முழுவதும் வரும் 25ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையில்,கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து இரவு நேரங்களில் கிறிஸ்மஸ் தாத்தா கேரல்ஸ் பாடல்களை பாடி இயேசு பிறந்த நாளின் சிறப்புகளை எடுத்துரைத்து வருகின்றனர்.

இந்நிலையில் உதகையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளும் ஒருங்கிணைந்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னோட்டமாக SANTA CLAUS என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா பவனி நிகழ்ச்சி நடைப்பெற்றது. உதகை மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தாமஸ் ஆலயத்தில் துவக்கி வைத்த இந்த ஊர்வலம் மத்திய பேரூந்து நிலையம், மணிகூண்டு, கமர்சியல் சாலை நகரின் முக்கிய வழியாக தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் துதி பாடல்களை பாடி வந்தனர். கடுங்குளிர் நிலவிய போதிலும் ஏராளமான மக்கள் சாலையில் இருபுறமிருந்து கிறிஸ்மஸ் தாத்தா ஊர்வலம் வருவதை கண்டு களித்தனர்.

மேலும் படிக்க