• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

December 17, 2018 தண்டோரா குழு

கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கோவையில் வைஷால் வீதி , பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

இது குறித்து கடை மற்றும் வீடுகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்று தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து இருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க