• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி – முதல்வர் கமல்நாத் அறிவிப்பு

December 17, 2018 தண்டோரா குழு

முதல்வராக பதவியேற்றபின் கமல்நாத் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்து கோப்பில் கையெழுத்துவிட்டார்.

நடந்து முடிந்த சட்டபேரவை தேர்தலில் மத்தியபிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சி பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது. இதற்கிடையில், மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக கமல்நாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, போபாலின் பெல் பகுதியில் உள்ள ஜம்பூரி மைதானத்தில் இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில், முதல்வராக பதவியேற்றபின் கமல்நாத் முதல் கையெழுத்தாக மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகளின் ரூ.2 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்து கோப்பில் கையெழுத்திட்டார். விவசாயிகள் கடன் தள்ளபடி செய்யப்படும் என தேர்தலின்போது கமல்நாத் வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க