• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எச்.ராஜாவை கைது செய்யக்கோரி கோவையில் விசிகவினர் கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார்

December 12, 2018 தண்டோரா குழு

தொடர்ந்து சாதி, மத கலவரங்களை தூண்டும் விதமாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசி வருவதாகவும், எனவே அவரை கைது செய்யக்கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அளித்தனர்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயலாளரான பாலசிங்கம் சார்பில அளிக்கப்பட்ட மனுவில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் பேட்டி அளித்த எச்.ராஜா, திருமாவளவன் எந்த கட்சியை தொட்டாலும் மற்ற எந்த கட்சியும் திருமாவளவனை தொட மாட்டார்கள் என்று ஒரு தாழ்த்தப்பட்ட சமூக தலைவரை இழிவுப்படுத்தும் செயலிலும், பார்த்தால் பாவம் தொட்டால் தீட்டு என்கிற பழமொழிக்கு ஏற்ப எச்.ராஜா அளித்த பேட்டி, பட்டியல் இன, தாழ்த்தப்பட்ட சமூகத்தையே திட்டமிட்டு கேவலப்படுத்தும் நோக்கத்தோடும், சமூதாயத்தில் இழிவான, தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதுமாக உள்ளதாக குற்றச்சாட்டப்பட்டிருந்தது. எச்.ராஜாவின் இந்த பேட்டியால் திருமாவளவன் மன உளைச்சல் ஆளாக்கியுள்ளதாகவும், எனவே எச்.ராஜா மீது எஸ்.சி.எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க