• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிலப் பிரச்சனையால் குழந்தையின் நாக்கை அறுத்த பெண்

December 10, 2018 தண்டோரா குழு

வேலூரில் நாட்றாம்பள்ளி அருகே நிலப்பிரச்னை காரணமாக குழந்தையின் நாக்கை அறுத்த பெண் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.

வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவருக்கு நில தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில்,லட்சுமி விஜயராகவனின் ஒன்றாம் வகுப்பு படிக்கும் மகன் திக்சாந்த் வீட்டருகே விளையாண்டு கொண்டிருந்த பொழுது சிறுவனை மறைவான இடத்துக்கு அழைத்து சென்று நாக்கை அறுத்துள்ளார்.

பின்னர், பலத்த காயத்துடன் ரத்தம் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திக்சாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விஜயராகவன் போலீசில் புகார் அளித்தும் லட்சுமி மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். காவல்துறையின் இச்செயல் மிகுந்த மனக்கவலையை ஏற்படுத்துவதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க