• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருடர்களுக்கு அற்புத வாய்ப்பு ஒரு மணி நேரத்திற்கு 64 டாலர் சம்பளம் !

December 10, 2018 தண்டோரா குழு

வெளிநாட்டில் திருடர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று இங்கிலாந்தை சேர்ந்த ஒரு கடை உரிமையாளர் இன்டர்நெட்டில் விளம்பரம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டிலுள்ள bark.com என்ற பிரபல வேலை வாய்ப்பு இணையதளத்தில் சமீபத்தில் வித்தியாசமான வேலைவாய்ப்பு விளம்பர பதிவு ஒன்று இடம் பெற்றிருந்தது. அந்த விளம்பர பதிவில் சிறப்பான திருடர்களுக்கு அந்த நாட்டு மதிப்பில் ஒரு மணி நேரத்திற்கு 64 டாலர் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இந்திய மதிப்பில் ரூ 4500 சம்பளமாகும்.

சொந்த நிறுவனத்திலே திருடுபவரை அதிக சம்பளம் கொடுத்து வேலைக்கு எடுப்பார்கள என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. ஆனால் அதன் உண்மை காரணம் என்னெவென்று அந்த கடை உரிமையாளர் கூறுகையில், அவரது கடையில் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்துகொண்டே இருந்துள்ளது. இதை தடுப்பதற்காக சிசிடிவி கேமராக்கள், பாதுகாவலர்கள் என எல்லாம் அமைத்திருந்தும் அதை மீறி திருட்டுகள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருந்துள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்த கடை உரிமையாளர் தற்போது இந்த புது முயற்சியில் இறங்கியுள்ளார். தனது நிறுவனத்தில் திருடும் திருடர்களுக்கு இவரே சம்பளம் கொடுத்து நியமிக்கவுள்ளார். அந்த திருடர்கள் கடையில் உள்ள பொருட்களை திருட வேண்டும் திருடும் போது பாதுகாவலர்களிடமோ அல்லது சிசிடிவி கேமராவிலோ மாட்டிவிட கூடாது.

அப்படி ஒரு வேலை மாட்டிக்கொண்டால் திருடிய பொருட்களை மீண்டும் அந்த நிறுவனத்திடமே ஒப்படைத்து விட்டு அவர் எப்படி திருடினார் எனறு சொல்ல வேண்டும். இந்த வேலைக்காக அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு இந்திய மதிப்பில் ரூ4500 சம்பளம் வழங்க அவர் திட்டமிட்டுள்ளளார்.
நிறுவனத்தில் நடக்கும் திருட்டை தடுக்கவே இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளார். திருடர் வழங்கும் தகவல்கள் மூலம் அந்த திருட்டை எப்படி தடுப்பது என்றும் பாதுகாப்பு கட்டமைப்பை மேலும் வலுப்பெற செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு விளம்பரத்தை குறித்து பலரும் சமூகவலைதளங்களில் பேசி வருகின்றனர். இங்கிலாந்து முழுவதும் விளம்பரம் இந்த பெரும் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க