• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மத்திய இணை அமைச்சர் உபேந்திர குஷ்வாகா திடீர் ராஜினாமா !

December 10, 2018 தண்டோரா குழு

மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் இணை மந்திரியாக இருக்கும் ராஷ்டரிய லோக் சமதா கட்சி தலைவர் உபேந்திரா குஷ்வாஹா ராஜினாமா செய்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் செல்வாக்குபெற்ற ராஷ்டரிய லோக் சமதா கட்சியின் தலைவர் உபேந்திரா குஷ்வாஹா. இவர் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் மனிதவள மேம்பாட்டு துறை இணை மந்திரியாக பதவி வகித்து வந்தார். இவருடன் சேர்த்து பாராளுமன்ற மக்களவையில் இந்த கட்சிக்கு மூன்று உறுப்பினர்கள் உள்ளனர்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தொடர்பாக பா.ஜ.க.வுடன் உபேந்திரா குஷ்வாஹா நடத்திய பேச்சுவார்த்தையில் ராஷ்டரிய லோக் சமதா கட்சிக்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை என தெரியவருகிறது. இந்நிலையில், உபேந்திரா குஷ்வாஹா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

உபேந்திரா குஷ்வாஹா ராஜினாமா செய்துள்ளது பெரும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர்
அலுவலகத்துக்கு குஷ்வாஹா அனுப்பி வைப்பார் அல்லது, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து கடிதத்தை அளிப்பார் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் படிக்க