• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ நினைவிடம் நோக்கி அதிமுகவினர் அமைதிப் பேரணி – ஓபிஎஸ் இபிஎஸ் பங்கேற்பு!

December 5, 2018 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு மெரினாவில் அமைந்திருக்கும் அவரது நினைவிடம் நோக்கி அதிமுக தொண்டர்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 75 மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5 ஆம் தேதி இரவு உயிரிழந்தார்.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் இன்று ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு நாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுகவினர் அமைதி பேரணி நடத்தினர். இந்த அமைதிப் பேரணியை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் தலைமையேற்று முன்னிலைபடுத்தினர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களுடன் வாலாஜா சாலையிலிருந்து மெரீனாவிலுள்ள ஜெ.நினைவிடம் நோக்கி பேரணியாக சென்றனர்.

பேரணி முடிவடைந்தவுடன் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அனைவரும் மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் உறுதி மொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்க