• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு 2 பேர் உயிரிழப்பு

December 4, 2018 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த கந்தசாமி என்பவர் பன்றி காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அதைபோல் சூலூரை அடுத்த அப்பநாயக்கம்பட்டியை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 1ஆம் தேதி சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் விஜயலட்சுமியை சேர்த்தனர். 2 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு அவர் உயிரிழந்தார்.

தற்போது பன்றிக் காய்ச்சலுக்கு 23 பேருக்கும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கும், காய்ச்சலுக்கு 63 பேருக்கும் என மொத்தம் 90 பேருக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க