• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி

December 4, 2018 தண்டோரா குழு

பத்தாண்டுகளுக்கு முன் உயிரிழந்த தனது கணவரின் ஓய்வூதியத்தை தனக்கு வழங்க கோரி மூதாட்டி ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மரத்தில் தான் அணிந்திருந்த சேலையால் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை அடுத்த செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த குந்நி முகம்மது என்பவரது இரண்டாவது மனைவி கண்ணம்மா என்கிற ரம்லத். நெடுஞ்சாலைத்துறையில் மேஸ்திரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற குந்நி முகம்மது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வரவேண்டிய பென்ஷன் தொகை முதல் மனைவிக்கு வந்து கொண்டிருந்த நிலையில் முதல் மனைவியும் உயிரிழந்ததால் கணவர் குந்நி முகமது பென்சனை தனக்கு தர வேண்டும் என ரமலத் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து பல ஆண்டுகளாக அவர் கோரிக்கை விடுத்தும் ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால் இன்று பிற்பகல் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள புளிய மரத்தருகில் வந்த அம்மூதாட்டி திடீரென தான் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து அதை கொண்டு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்தவர்கள் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்டு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மாவட்ட ஆட்சியர் தனக்கு பென்ஷன் தர மறுப்பதாகவும் பென்ஷன் தரும் வரை தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே தங்கி இருக்க உள்ளதாகவும் கூறிய அம்மூதாட்டி தான் தற்கொலை செய்து அதற்கு காரணமான மாவட்ட ஆட்சியரை கொலை குற்றவாளியாக்கவே தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க