• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தகுதிக்கேற்ற ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கிட வலியுறுத்தி புற நோயாளிகள், சிகிச்சை புறக்கணிப்பில் ஈடுபட்ட மருத்துவர்கள்

December 4, 2018 தண்டோரா குழு

அரசு மருத்துவர்கள், தகுதியின் அடிப்படையில் காலமுறையிலான ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கிடக்கோரி பல வருடங்களாக போராடி வருகின்றனர். மற்ற மாநிலங்கள் மற்றும் மத்திய அரசை ஒப்பிடும்போது , தமிழக அரசு மருத்துவர்களுக்கு குறைவான ஊதியம் மற்றும் பணப்படி வழங்கப்படுவதை கண்டித்து இன்று ஒரு நாள் புறநோயாளிகள் சிகிச்சை புறக்கணிப்பில் மருத்துவர்கள் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவர் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கைளை வலியுறுத்தியபோது , ஊதியம் உயர்த்தி தரப்படும் என தமிழக அரசு வாக்குறுதி கொடுத்து ஒராண்டாகியும் இதுவரை செயல்படுத்தவில்லை. நோயாளிகள் பாதிக்கப்படாமல், அரசுக்கு ஒத்துழையாமை போராட்டத்தை மருத்துவர்கள் கடந்த இருபது நாட்களாக நடத்தி வந்தும் அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இன்று புற நோயாளிகள் புறக்கணிப்பில் தமிழகம் முழுவதும் 18688 அரசு மருத்துவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இதற்கும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால், வருகின்ற 8 ஆம் தேதி திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யாமல் புறக்கணிப்பதாகவும், தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி இந்த மாத இறுதியில் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் தமிழக அரசை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர் தெரிவித்தார்.

மேலும் படிக்க