• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் நிவாரணம் தந்த சிறுமிக்கு சைக்கிள் வழங்கி முதலமைச்சர் பாராட்டு

December 3, 2018 தண்டோரா குழு

கஜா புயல் நிவாரண நிதிக்காக தான் சேமித்து வைத்த பணத்தை கொடுத்த சிறுமியை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சைக்கிளை பரிசாக வழங்கினார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளானதால் மக்களின் இயல்பு நிலை மாறியுள்ளது. தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தேவையான பொருட்களையும், நிதிஉதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகள் அக்சயாஸ்ரீ. இவர் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வருவதற்காக சைக்கிள் வாங்க அவர் சேமித்து வைத்த 520 ரூபாயை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்தார். இதனையறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவி அக்சயாஸ்ரீயை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சிறுமிக்கு புதிய மிதிவண்டி ஒன்றை பரிசாக வழங்கினார்.

மேலும் படிக்க