• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் – இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு

December 3, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் 20 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளித்து, வாக்கு சேகரிக்க உள்ளதாக கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொன்னுசாமி இதனைத் தெரிவித்தார். அத்திக்கடவு அவினாசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும், இதனால் வருகிற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளித்து வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். கட்சிசார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க