காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது.
இப்படத்தில், ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
அண்மையில் பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 9ம் தேதி பேட்ட படத்தின் இசை வெளியிடவுள்ளதாக சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள எஸ்.பி.பி, அனிருத் இணைந்து பாடிய “மரண மாஸ் ” என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கோவை புரோஜோன் மால் 8-வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் -அனைத்து பிராண்டுகளிலும் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு
172 நகரங்களில் 300 வாடிக்கையாளர் தொடர்பு மையங்களுடன் புதிய மைல்கல்லை ஸ்கோடா ஆட்டோ இந்தியா எட்டியுள்ளது
பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஏழு பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – கோவை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
டொயோட்டா 5வது தலைமுறை ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் புத்தம் புதிய கேம்ரி ஹைப்ரிட்டின் அனுபவமிக்க வாடிக்கையாளர் பயணத்தை ஏற்பாடு செய்தது
கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா
கிராப்ட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு சார்பில் கோவையில் கிராப்ட் பஜார் 2025 துவக்கம்