• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏழு பேர் விடுதலை குறித்து நடிகர் விஜய் சேதுபதி,இயக்குநர் ராம் டுவீட் !

November 30, 2018 தண்டோரா குழு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை சென்றுள்ள ஏழு பேர் விடுதலை குறித்து நடிகர் விஜய் சேதுபதி ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன்,சாந்தன்,நளினி,முருகன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவுசெய்து கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை கூட்டப்பட்டது.அதில் ராஜீவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவிக்க முடிவெடுத்து அதை தீர்மானமாக ஆளுநருக்குப் பரிந்துரை செய்து தமிழக அரசு அனுப்பியது.தற்போது ஆளுநரின் முடிவிற்காக தமிழக அரசு காத்துக்கொண்டிருகிறது.

இதற்கிடையில்,ஏழு பேரும் சிறை சென்று இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது.இதையடுத்து #28YearsEnoughGovernor என்ற ஹேஷ்டேக்கின் கீழ்,அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி பலரும் வேண்டுகோள் விடுத்து இதனை ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.அதைபோல் தமிழக அரசு பரிந்துரை வழங்கியும் ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் ஆளுநருக்கு கோரிகைகள் வந்து கொண்டே இருக்கிறன்றது. இந்நிலையில்,ஏழு பேர் விடுதலை குறித்து நடிகர் விஜய் சேதுபதி ஆளுநருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

ஏழுபேர் விடுதலை என்பது தமிழர்களின் பிரச்சனை மட்டுமல்ல.இது ஒரு மனித உரிமை பிரச்சனை.இத்தனை வருடங்கள் அவர்களை சிறையில் அடைத்து வைத்திருந்ததே போதும்.அவர்களின் விடுதலை குறித்து ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதைபோல் இயக்குநர் ராம் தனது டுவிட்டர் பக்கத்தில்,

திறக்கட்டும் கதவுகள்.கவர்னரை சென்றடையும் வரை பதிவுகள் இடுவோம் என்று குறிபிட்டுள்ளார்.

மேலும் படிக்க