• Download mobile app
29 Sep 2026, TuesdayEdition - 3884
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் – முதல்வர்

November 28, 2018 தண்டோரா குழு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக,ரயில் மூலம் இன்று காலை நாகப்பட்டினத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றடைந்தார்.
அம்மாவட்டத்தில் கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

பின்னர்,புயலால் வீடுகளை இழந்தவர்கள், கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதிகளையும்,தென்னைகளை இழந்தவர்களுக்கு தென்னங்கன்றுகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.அவ்வேளையில் பொதுமக்களிடன் தரப்பில் கொடுக்கப்பட்ட மனுக்களை பெற்றுக்கொண்டு அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி,

“நாகை மாவட்டத்தில் கஜா புயல் மிகக் கடுமையான அளவில் சேதாரங்கள்,பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.இப்பதிப்பில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.15 போ் உயிரிழந்துள்ளனர்.400 மேற்பட்ட முகாம்களில் 2 லச்சதிறக்கும் மேர்பட்டோர் தங்கவைகப்படுள்ளனர்.300க்கும் அதிகமான பேரிடா் மீட்புப்படை வீரா்கள் பணியில் ஈடுபட்டுள்ளனா்.கஜா புயலால் வீடுகளை இழந்தவா்களுக்கு 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.அரசை பொறுத்தளவில் பாரபட்சமின்றி அனைவருக்கும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறோம்.மத்திய அரசும் கருணையோடும்,மனிதாபிமானத்தின் அடிப்படையில் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்” என்று அவா் கூறியுள்ளார்.

மேலும் படிக்க