• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு என நீதிபதி தருண் அகர்வாலா குழு அறிக்கை

November 28, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடியில்,ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவு தவறு என்று முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனதை அடுத்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.இதை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம்,நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தும்,ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இம்மனு கடந்த செப்டம்பர் 10–ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது.மீண்டும் தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனு கடந்த 20–ந் தேதியன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில்,இந்த குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆய்வு நடத்தினார்.ஆய்வு நடத்தி அறிக்கையை பசுமை தீர்ப்பாயத்தில் மூன்று தினங்களுக்கு முன்பாக இந்த குழு தாக்கல் செய்தது.48 தனித்தனி சீலிடப்பட்ட கவர்களில் நிலத்தடி நீர்,காற்று மாசு,சுற்றுப்புறச்சூழல் மாசு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததற்கான அறிக்கை தாக்கல் செய்தது.

இந்நிலையில்,இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது,தருண் அகர்வால் குழு வழங்கிய பரிந்துரைகள் தெரியவந்தது.அதில்,ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு உரிய காரணம் இல்லை.ஸ்டெர்லைட் ஆலையிடம் தமிழக அரசு விளக்கம் கேட்கவில்லை.ஸ்டெர்லைட் ஆலையின் நியாயத்தை கேட்காமல் தமிழக அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.நிலத்தடி நீர்,காற்று மாசு ஆகியவற்றை தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தொடர்ந்து ஆய்வு செய்யலாம் என தருண் அகர்வால் தலைமையிலான குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதை பரிசீலித்த,பசுமை தீர்ப்பாயம்,இந்த அறிக்கை பற்றி 1 வாரத்தில் தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு,டிசம்பர் 7ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைத்துள்ளது.தருண் அகர்வால் தாக்கல் செய்த அறிக்கையால் தமிழக அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க