• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றக்கிளை

November 26, 2018 தண்டோரா குழு

சர்கார் படத்துக்கு நவம்பர் 6 முதல் 16 வரை மதுரை மாவட்ட தியேட்டர்களின் வசூல் விவரங்களை ஆட்சியர் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றக்கிளை உத்திரவிட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிப்பில் கடந்த 6ம் தேதி வெளியான படம் சர்கார். இப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதற்கிடையில்,மதுரையில் சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மகேந்திர பாண்டி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.அதில் அரசாணையை பின்பற்றாமல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரித்த உயர்நீதி மன்ற மதுரை கிளை,மதுரையில் சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? நவம்பர் 6 முதல் 16 வரை மதுரை மாவட்ட திரையரங்குகளின் தினசரி கட்டண வருவாய் அறிக்கையை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க