• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரயில் பயணிகள் பாதுகாப்பிற்காக புதியசெயலி அறிமுகம் !

November 24, 2018 தண்டோரா குழு

இரயில் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த GRP help app எனப்படும் புதிய செயலியை ஏ.டி.ஜி.பி. சைலேந்தர் பாபு கோவை இரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ரயில் பயணிகள் அனைவரும் இந்த செயலியை ரயிலில் பயணிக்கும் போது தரவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும். திருட்டு, பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை, சந்தேகத்திற்கிடமான பொருட்கள், நபர், கைவிடப்பட்ட சிறார்கள், குழந்தைகள் என ரயிலிலோ, ரயில் நிலையத்திலோ பார்க்க நேர்ந்தால் உடனே இந்த செயலி மூலம் தகவல் தெரிவித்தால், 2 நிமிடங்களில் ரயில்வே காவல்துறையினர் அங்கு வந்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் இந்த செயலி உதவும்.

போபாலில் இதனுடைய தலைமை அலுவலகம் உள்ளதால், வட மாநிலத்திற்கு சென்றால் கூட இந்த செயலியை பயன்படுத்தலாம். சென்றாண்டு மட்டும் பெண்களிடம் தவறாக நடந்துக்கொண்ட 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதுபோன்ற நேரத்தில் காவல் நிலையம் சென்று தான் புகார் அளிக்க வேண்டும் என்பதில்லை, இந்த செயலி மூலம் என்ன நடந்தது என்று புகார் தெரிவித்தால், வீட்டிற்கு பெண் ரயில்வே காவல் அதிகாரி வந்து விசாரித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

மேலும் படிக்க