• Download mobile app
08 Feb 2026, SundayEdition - 3651
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட பாஜக சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

November 23, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட பாஜக சார்பில் ரூ.3லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டது.

உணவு பொருட்கள், பாய், மாவு வகைகள், பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் கோவை பாஜக மாவட்ட அலுவலகமான சித்தாபுத்தூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன்,

புயல் வருவதற்கு முன்பாகவே மத்திய அரசு சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், புயலை வைத்து யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 க்கு பிறகு நாட்டின் எந்த மாநிலத்திலும் எந்த இயற்கை பேரிடர் போதும் தேசிய பேரிடராக அறிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டவர், தமிழக அரசுக்கு உதவ மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க