• Download mobile app
06 Aug 2026, ThursdayEdition - 3830
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கலப்பட எண்ணெய் மற்றும் நெய் பறிமுதல்

November 23, 2018 தண்டோரா குழு

கோவையில் பிரபல நிறுவனங்களின் பேரில் தயாரிக்கப்பட்ட 500 லிட்டர் கலப்பட எண்ணெய் மற்றும் நெய்யை கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவையை அடுத்த கே.கே.புதூர் பகுதியில் எண்ணெய் தயாரிப்பது குடோன் இயங்கி வந்து உள்ளது. இந்நிலையில் இந்த குடோனில் இன்று கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பரிசோதனை செய்து பார்த்ததில் அங்கு தயாரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் நெய் முழுவதும் கலப்படம் என தெரிய வந்தது. கடந்த சில மாதங்களாக பிரபல நிறுவனங்கள் பெயரில் எண்ணெய் மற்றும் நெய்யை தயாரித்து வந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அங்கு தயாரிக்கப்பட்ட 500 லிட்டர் கலப்பட எண்ணெய் மற்றும் நெய்யை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இவர்கள் பல்வேறு பகுதிகளில் கலப்பட எண்ணெய் தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட உரிமையாளரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இது போன்ற கலப்பட எண்ணெய்யை தயார் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க