• Download mobile app
19 Aug 2026, WednesdayEdition - 3843
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில், காட்டு யானையை வேறு இடத்துக்கு மாற்ற வனத்துறைக்கு, மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவுரை

November 21, 2018 தண்டோரா குழு

கோவையில் விளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டு உள்ளார்.

இது குறித்து சென்னையில் உள்ள வனஉயிரின காப்பாளருக்கு கடிதம் அனுப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில், கோவையில் வரப்பாளையம், பன்னிமடை, பெரிய தடாகம், சின்னதடாகம் ஆகிய பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களாக காட்டு யானை ஒன்று விளை நிலங்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானை தக்காளி, சோளம், கரும்பு, வாழை, தென்னை உள்ளிட்ட பல பயிர்கள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கபட்டுகின்ற்னர். இந்த யானையை அடர்ந்த வன பகுதிக்கு அனுப்ப முயன்றும் பலனளிக்கவில்லை.

இதனால் மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இதற்காக சாடிவயலில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு விரட்டும் முயற்சி நடக்கிறது. இது குறித்து குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் யானையால் ஏற்பட்ட சேதம் குறித்தும் யானையை இடமாற்றம் செய்யவும் மனுக்கள் அளித்தனர். எனவே விவசாயிகளின் பயிர்களையும், மனித உயிரிழப்பை ஏற்படுத்தும் காட்டு யானையை முதுமலை காட்டு பகுதிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க