நெல்லை மாவட்டம் பரதர் உவரியில் மாதா கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனியில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். சப்பரம் வீதி உலா வந்த போது, தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பியில் உரசியது. இதனால் சப்பரத்தை தாங்கிச் சென்ற பக்தர்கள் பலத்த மின் தாக்குதலுக்கு ஆளாகித் தூக்கி வீசப்பட்டனர்.
இதில், ராஜா (29), கிளைவ் (28), ராஜா (31), நிமோ (18), ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆட்சியர் விஷ்ணு மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து தமிழக முதல்வர் விபத்தில் இறந்த நான்கு பேருக்கும் தலா 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு