• Download mobile app
16 Aug 2026, SundayEdition - 3840
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

November 21, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,

“வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. இதனால்,அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும்.சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்.அடுத்த 24 மணி நேரத்தில்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிதமான மழை பெய்யும்.தென் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மீனவர்கள் இன்று தெற்கு ஆந்திரா,தமிழக கடற்கரை,மன்னார் வளைகுடா கடலுக்கு செல்ல வேண்டாம்.கடந்த 24 மணி நேரத்தில்,கடலோர பகுதிகளில் பரவலாகவும்,உள் பகுதிகளில்,ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது.அதிகபட்சமாக காரைக்கால்,தரங்கம்பாடியில் 7 செ.மீ., மழை பெய்துள்ளது”.என்றார்.

மேலும் படிக்க