• Download mobile app
07 May 2026, ThursdayEdition - 3739
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் இறந்த மூதாட்டியின் உடலை கடித்த பூனை !

November 20, 2018 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் இறந்த மூதாட்டியின் உடலை பூனை கடித்து தின்னும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி ஒருவர் நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்தார்.அவர் பெயர்,ஊர் போன்ற தகவல்கள் இல்லாததால் அந்த மூதாட்டியின் உடலை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் வார்டிலேயே மருத்துவமனை ஊழியர்கள் போட்டு வைத்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சுற்றி திரிந்த பூனை ஒன்று தரையில் அலட்சியமாக வைக்கப்பட்டிருந்த இறந்த பெண்ணின் உடலை தின்று கொண்டிருந்தது. இதனைக் கண்ட,சில இளைஞர்கள் புகைப்படமாக எடுத்துள்ளனர்.இதை அந்த வார்டில் நோயாளிகளின் உறவினர்கள் பார்த்து மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்த போதும் அவர்கள் உடனடியாக உடலை பிணவறைக்கு கொண்டு செல்லாமல் இருந்துள்ளனர்.இதனையடுத்து அங்கிருந்த நோயாளிகள் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்த பின்னரே அவசர அவசரமாக இறந்த பெண்ணின் உடலை பிணவறைக்கு கொண்டு சென்றனர்.

மேலும்,அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை உடனடியாக பிணவறைக்கு கொண்டு செல்லாமல், பூனை சடலத்தை கடிக்கும் வரை மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டது பொது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க