• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காஷ்மீர் விவகாரத்தில் ஷாகித் அப்ரிடியின் கருத்தை வரவேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

November 15, 2018 தண்டோரா குழு

காஷ்மீர் யாருக்கும் வேண்டாம்,அதனை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடியின் கருத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி நேற்று லண்டன் ‘மாணவர்கள் நாடாளுமன்றத்தில்’, பாகிஸ்தான் அரசின் செயல்பாடு அதிருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் காஷ்மீரை பாகிஸ்தான் கேட்கவில்லை,இந்தியாவும் காஷ்மிரை கொடுக்க வேண்டாம்.காஷ்மீர் மாநிலத்தை சுதந்திரமாக செயல்படவிடுங்கள் போதும்.

பாகிஸ்தான் அரசால் நான்கு மாகாணங்களை கூட சரியாக நிர்வகிக்க இயலாது.காஷ்மீரை கேட்டும் பயனில்லை.காஷ்மீரில் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சுதந்திரமாக வாழ அனுமதிக்கப்பட வேண்டியவர்கள்.இந்தியாவோ அல்லது பாகிஸ்தானோ காஷ்மீரை கட்டுப்படுத்தக் கூடாது,மாறாக காஷ்மீர் ஒரு சுதந்திர நாடாக உருவாக அனுமதிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அரசுக்கு அறிவுரை கூறினார்.

இந்நிலையில்,ஷாகித் அப்ரிடியின் இந்தக் கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளார்.சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத்சிங்,காஷ்மீர் குறித்து சாகித் அப்ரிடி கூறுவது சரி தான்.சொந்த நாட்டையே கையாள முடியாத பாகிஸ்தான் அரசு,காஷ்மீரை எப்படி சமாளிக்கும்.காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியே என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க