• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இயக்குனர் அவதாரம் எடுத்தார் தனுஷ்

September 7, 2016 தண்டோரா குழு

திரையிலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு கோணங்களில் தன் திறமையை நிரூபித்து வரும் நடிகர் தனுஷ் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

தமிழில் வெற்றிமாறனின் கனவு திரைப்படமான வடசென்னை, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் என பிசியாக இருந்து வரும் நடிகர் தனுஷ் தற்போது நடிகர் ராஜ்கிரனை வைத்து தனது முதல் படத்தை இயக்கவுள்ளார்.

மேலும்,இப்படத்துக்கு ‘பவர் பாண்டி’என தலைப்பு வைத்துள்ள தனுஷ் இதன் முதல் பார்வை போஸ்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். தமிழில் வாயைமூடி பேசவும் படத்தின் மூலம் அறிமுகமான இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இப்படத்துக்கு இசையமைக்கிறார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என அனைத்திலும் வெற்றி வாகைச் சூடிய தனுஷ், இயக்கத்திலும் வெற்றிபெறுவார் என கருதப்படுகிறது.

தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா ராஜ்கிரண் நடிப்பில் வெளியான என் ராசாவின் மனசிலே படம் மூலம் தான் இயக்குநராக அறிமுகம் ஆனார்.அதைப்போல் இன்று ராஜ்கிரனை இயக்கி இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் தனுஷ்.

மேலும் படிக்க