• Download mobile app
27 Jun 2026, SaturdayEdition - 3790
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்கார் படத்தில் என்னென்ன காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது?

November 9, 2018 தண்டோரா குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் சர்கார்.இப்படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.இதற்கிடையில்,படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் மற்றும் அதிமுகவின் திட்டங்கள் குறித்தும்,அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து,தமிழகம் முழுக்க சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சில இடங்களில் திரையங்குகளில் வைக்கப்பட்டுள்ள விஜய்யின் பேனர்களை அதிமுக தொண்டர்கள் கிழித்து போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால்,சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக கூறப்பட்டது.

இந்நிலையில்,படத்தின் மறுதணிக்கை இன்று காலையில் நடைபெற்றது.சென்னையில் தணிக்கை அதிகாரி லீலா மீனாட்சி தலைமையிலான குழுவினர் மறுதணிக்கை செய்தனர்.இதையடுத்து இன்று பிற்பகலில் திரையிடப்படும் சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்காது என்று கூறப்படுகிறது.

சர்கார் படத்தில் இருந்து நீக்கபட்டுள்ள காட்சிகள்:

சர்காரில் அரசின் இலவச மிக்சி,கிரைண்டர் போன்ற பொருட்களை நெருப்பில் வீசும் 5 நொடி காட்சி நீக்கப்பட்டுள்ளது.வரலட்சுமி சரத்குமார் கதாபாத்திரத்தின் பெயரான கோமளவல்லி என்ற ஆடியோ மியூட் செய்யப்பட்டுள்ளது.டெங்கு கட்டுபடுத்த தவறிய பொதுப்பணித்துறை என்ற வசனமும் மியூட் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க