• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உபியில் கொடூரம் : 3 வயது சிறுமியின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த வாலிபர்

November 8, 2018 தண்டோரா குழு

உத்திரபிரதேச மாநிலத்தில் 3 வயது குழந்தையின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மில்லக் கிராமத்தில் புதன்கிழமை இரவு சிறுவர்கள் சிலர் பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அப்போது சசிகுமார் என்பவரின் 3 வயது மகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தார். திடீரென பட்டாசு விபத்தில் அந்த குழந்தை பலத்த காயமடைந்துள்ளார். அவரது வாய் சிதைந்த நிலையில் அலறிய படி குழந்தை வீட்டிற்க்குள் வந்துள்ளது. உடனடியாக குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வாய்ப்பகுதியில் 50 தையல்கள் போடப்பட்டுள்ளன. தொண்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவளது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் வாயில், அதே பகுதியைச் சேர்ந்த ஹர்பால் என்ற வாலிபர் பட்டாசை வைத்து வெடிக்க செய்ததாக காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை சசிகுமார் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க