• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

November 5, 2018 தண்டோரா குழு

கேரளாவில் சிறப்பு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

கேரள மாநிலம் சபரிமலையில் உலகப்புகழ்பெற்ற ஐய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கோயிலுக்குள் செல்வதற்கு பெண்கள் வந்தனர். ஆனால், பக்தர்கள் மற்றும் சன்பரிவார் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், சித்திரை ஆட்டத்திருநாள் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. சரணம் ஐயப்பா முழுக்கத்துக்கு இடையே சன்னிதானம் நடையை மேல்சாந்தி திறந்தார்சிறப்பு பூஜைக்காக திறக்கப்பட்டுள்ள சபரிமலை கோயில் நடை நாளை இரவு 10.30 மணிக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மீண்டும் நடைதிறக்க இருப்பதால் பலர் போரட்டத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. இதனால் பம்பை , நிலக்கல் , இல்வுங்கல் மற்றும் சன்னிதானம் பகுதிகளில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சோதனைக்கு பிறகே பம்பை பகுதியில் நுழைய முடியும் என்று பத்தனம் திட்டா மாவட்ட காவல் அதிகாரி நாராயணன் தெரிவித்துள்ளார். இன்று இரவு முதல் 2,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடஉள்ளனர். மேலும், 20 பேர் கொண்ட கமாண்டோ குழுவும் சபரிமலையில் இருக்கிறது.

மேலும் படிக்க