• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு

November 3, 2018 தண்டோரா குழு

கோவையில் தீபாவளியை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் 155 சிறிய கடைகள் 49 பெரிய நிறுவனங்களில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் ஸ்வீட்ஸ் கடைகளில் ஸ்வீட்ஸ்,காரம் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.எனினும்,இந்த ஸ்வீட்ஸ்,காரம் உள்ளிட்டவை தரமாக உள்ளதா? கூடுதல் நிறமிகள் சேர்க்கப்படுகிறதா? பயன்படுத்திய ஆயில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து நமக்கு ஏதும் தெரியாது.இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இது குறித்து ஆய்வுகள் நடத்த உணவு பாதுகாப்புத்துறையின்5 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளார்.

இந்த 5 குழுக்கள் இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கும் பெரிய சிறிய நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் ஆய்வு செய்து வருகிறது.இதுவரை 155 சிறிய கடைகளும் 49 பெரிய நிறுவனங்களும் பார்வையிடப்பட்டு 68.5 கிலோ அதிக கலர்கலந்த இனிப்பு,13 கிலோ லேபிள் இல்லாத பொருள் மற்றும் 35 லிட்டர் பழைய எண்ணெய் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.மேலும் 9 கடைகளுக்கு ஆய்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.4 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.கடை உரிமையாளர்களுக்கு கீழ கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.அதில்,

1.உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் இருக்க வேண்டும்.
2.சுற்றுப்புறம் மற்றும் இனிப்பு காரம் செய்யப்படும் இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.
3.இனிப்புகளுக்கு குறைந்த அளவுகளிலே கலர் பயன்படுத்த வேண்டும்.காரவகைகளுக்கு கலர் பயன்படுத்த கூடாது.
4. பணியாளர்கள் தன் சுத்தம் பேண வேண்டும்.

மேலும் படிக்க