• Download mobile app
11 Jul 2026, SaturdayEdition - 3804
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஆதரவாக வரலட்சுமி சரத்குமார் ட்வீட் !

October 29, 2018 தண்டோரா குழு

மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் ‘சர்கார்’.கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், வரலட்சுமி சரத்குமார்,ராதாரவி,யோகி பாபு,பழ.கருப்பையா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில்,‘சர்கார்’படத்தின் கதை,தன்னுடைய‘செங்கோல்’கதையில் இருந்து திருடப்பட்டது என்று உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்து உள்ளார்.அதைபோல் சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஓன்று தான் என எழுத்தாளர் சங்கத் தலைவரான இயக்குநர் கே.பாக்யராஜ் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.இதற்கிடையில்,இந்த வழக்கின் தீர்ப்பு,நாளை (அக்டோபர் 30) வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில்,ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஆதரவாக வரலட்சுமி சரத்குமார் ட்வீட் செய்துள்ளார்.அதில்,“என் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பக்கம் நான் நிற்கிறேன். உண்மை தான் ஜெயிக்கும்.உண்மை எப்போதுமே வெற்றி பெறும்.காலம் பதில் சொல்லும்”என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க