• Download mobile app
31 May 2026, SundayEdition - 3763
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக அனிமேசன் தினத்தை முன்னிட்டு கின்னஸ் முயற்சி

October 29, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் உலக அனிமேசன் தினத்தை முன்னிட்டு கின்னஸ் முயற்சியினை மேற்கொண்டுள்ளனர்.

உலக அனிமேஷன் தினத்தை முன்னிட்டு கோவை பொள்ளாச்சி சாலை மயிலேரிபாளையம் பகுதியில் அமைந்துள்ள கற்பகம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வீடியோ கேம் விளையாட சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தப்படும் ஜாய்ஸ்டிக் எனப்படும் மின் கருவி போன்ற வடிவத்தில் மாணவர் கின்னஸ் சாதனை முயற்சியினை மேற்கொண்டனர்.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 387மாணவர்கள் கலந்து கொண்டு ஜாய்ஸ்டிக் வடிவத்தில் நின்று இந்த முயற்சியினை மேற்கொண்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது உலக அனிமேசன் தினத்தை முன்னிட்டு இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும்,கடந்த 2013ம் ஆண்டு சீனாவை சேர்ந்த சோனி நிறுவனம் 259 பேர்களை கொண்டு ஹாங்காங்கில் உருவாக்கிய சாதனையை,387 பேர்களை கொண்டு செய்துள்ளோம் என தெரிவித்தனர். மேலும் இந்த முயற்சியானது கின்னஸ் புத்தக நிறுவனத்திற்கு அனுப்பபட்டுள்ளது முந்தைய சாதனையை முறியடிக்கும் வகையில் இந்த முயற்சி இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க