• Download mobile app
22 May 2026, FridayEdition - 3754
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை அரசியலில் திடீர் திருப்பம் – அதிபராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்ப்பு

October 26, 2018 தண்டோரா குழு

இலங்கை அரசியல் களத்தில் யாரும் எதிர்பாராத விதமாக பரபரப்பு திருப்பம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நாட்டின் 11-வது பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு முதல் முறையாக மஹிந்த ராஜபக்சே இலங்கை அதிபரானார்.தொடர்ந்து 2010 தேர்தலில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக இலங்கை அதிபரானார்.இலங்கையில் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அதிபராக முடியும். ஆனால், 2010-ம் ஆண்டு இந்தச் சட்டத்தை மாற்றிய ராஜபக்சே மூன்றாவது முறையாக 2015-ம் ஆண்டு அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால்,அவர் தோல்வியடைந்தார். இலங்கையின் புதிய அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார்.சிறிசேனா அமைச்சரவையில்பிரதமராகமுன்னாள்அதிபர்ரணில்விக்கரமசிங்கே பதவி ஏற்றுச் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.அதிபர் அலுவலகத்தில் நடந்த விழாவில் ராஜ்பக்சேவுக்கு சிறிசேனா முன்னிலையில் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுக்கொண்டார்.
ஆளும் கூட்டணி்யில் ஏற்பட்ட பிளவு காரணமாக இந்த பிரதமர் பதவி மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க