• Download mobile app
21 Jun 2026, SundayEdition - 3784
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிப்பு

October 24, 2018 தண்டோரா குழு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் ஆயுட்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார்.இதற்கிடையில்,அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.இதையடுத்து,ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு சார்பில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,இந்த விசாரணை ஆணையம் அப்போலோ மருத்துவமனையில் ஆய்வு,டாக்டர்கள்,மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை என அனைத்து தரப்பிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.அதைபோல் சசிகலா தரப்பிலும் அவ்வப்போது குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஏற்கெனவே இரண்டு முறை கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டது.இரண்டாவது முறையாக வழங்கப்பட்ட அவகாசம் இன்றுடன் ஆயுட்காலம் முடிவடைய இருந்த நிலையில் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க