• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக முதலமைச்சர் மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

October 22, 2018 தண்டோரா குழு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.

தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி நெடுஞ்சாலைத்துறையின்,ஒப்பந்த பணிகளை தனது உறவினர்களுக்கு வழங்கியதாக திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தார்.அதில்,4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்த பணிகளில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.லஞ்ச ஒழிப்புத்துறை என்பது முதல்வருக்கு கீழே செயல்படக்கூடிய ஒரு அமைப்பு.அதனால் இதில் பெரிய அளவில் எந்த விசாரணையும் செய்யப்படாமல்,வழக்கில் முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது.

இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்தார்.இதனையடுத்து,இதுகுறித்து விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கேட்கப்பட்டது.அதற்கு,”எந்த முறைகேடும் நடக்கவில்லை” என்று லஞ்ச ஒழிப்புத்துறை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்தது.இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.அதில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க