• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஸ்ர்போர்ட் கிடைத்ததும் வைரமுத்து மீது வழக்கு தொடர்வேன் – சின்மயி

October 20, 2018 தண்டோரா குழு

பாஸ்ர்போர்ட் கிடைத்ததும் வைரமுத்து மீது வழக்கு தொடர்வேன் என சின்மயி கூறியுள்ளார்.தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.இதில் மீடூ இயக்கத்தின் வாயிலாக புகார் அளித்த சின்மயி,லட்சுமி ராமகிருஷ்ணன்,லீனா மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சின்மயி,

“தற்போது தான் விஷால் அவர்கள் மூன்று நபர் கமிட்டி இதற்காக அமைக்கவிருப்பதாக கூறியுள்ளார்.அந்த கமிட்டியில் இருப்பவர்கள் யார்? அவர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்பது இனிமேல்தான் தெரியும்.
என்னுடைய திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்தது ஏன் என்ற கேள்விக்கு தான் பலமுறை பதிலளித்து விட்டேன்.

என் தாயாரின் உடல்நிலை காரணமாக என்னுடைய திருமணம் திட்டமிட்டபடி நடக்காமல் வேறொரு நாளில் நடந்தது.என்னால் நேரில் சென்று ஒருசிலரை அழைக்க முடியாததால் பி.ஆர்.ஓ மூலமே பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டவர்களில் ஒருவர் தான் வைரமுத்து.

அவர் எப்படிப்பட்டவர் என்பது எனக்கு மட்டுமின்றி என்னை சேர்ந்த பெண்கள் எல்லோருக்கும் தெரியும்.உங்களை போன்ற ஆண்களுக்குத்தான் அவரை பற்றி தெரியாது.மீடூ விவகாரத்தில் பெண்கள் ஆதரவு கொடுத்தது போல் ஆண்கள் ஆதரவு கொடுக்கவில்லை.

பெண்களை கேள்வி மேல் கேள்வி கேட்கும் ஆண்களில் எத்தனை பேர் குற்றம் சாட்டப்பட்டவரை கேள்வி கேட்டீர்கள்.நாங்கள் பாலியல் துன்புறுதலுக்கு ஆளாகியிருக்கிறோம்.ஆண்களே எங்களுடன் இருக்க வேண்டும் என்று தான் கெஞ்சுகிறோம்.

கட்டாயம் நான் வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்.நான் சுவிட்சர்லாந்து சென்று வந்த தேதி என்ன என்பது பாஸ்ர்போர்டில் இருக்கிறது.அந்த நிகழ்ச்சி நடந்தற்கான ஆதாரம் அந்த பார்ஸபோர்ட் மட்டும் தான் அதை தேடிக்கொண்டிருக்கிறேன்.பாஸ்ர்போர்ட் வந்த பிறகு அவர் மீது அவர் மீது வழக்கு தொடர்வேன்” என கூறியுள்ளார்.

மேலும் படிக்க