• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னையும் என் தந்தையையும் மிரட்டினார்கள்- நடிகர் சித்தார்த் !

October 17, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் #Metoo என்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள் தற்போது #MeToo இயக்கத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி வருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.

பாலியல் துன்புறுத்தலை கண்டிக்கும் வகையில் அதற்க்கு ஆதரவாக இருந்து வரும் சினிமா பிரபலங்களில் சித்தார்த்தும் ஒருவர்.இதற்கிடையில்,இயக்குனர் சுசிகணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக,கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்திருந்தார்.இதனால் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில்,லீனா மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த மீடூ வால் பெண்களுக்கு வேலையில்லா நிலை ஏற்படும் எனவும் கடுமையாக சாடினார்.மேலும்,மீடூ வை பயன்படுத்தி தவறு செய்யாத ஆண்களையும் தாக்குபவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் எனவும் சுசிகணேசன் கூறியிருக்கிறார் இதையடுத்து,லீனாவுக்கு ஆதரவாக நடிகர் சித்தார்த் ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த் பரபரப்பு தகவலை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில்,”நான் லீனாவின் பக்கம் நின்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இயக்குனர் சுசிகணேசன் என் வயது முதிர்ந்த தந்தையை தொலைபேசியில் மிரட்டியுள்ளார்.எனவே நான் இப்போது அனைவருக்கும் அழுத்தமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.நான் லீனா மணிமேகலைக்கு துணை நிற்கிறேன்.தைரியமுடன் போராடுங்கள் சகோதரி” என பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க