• Download mobile app
12 Jul 2025, SaturdayEdition - 3440
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இது புரியல? வெக்கக்கேடு சீமானுக்கு நடிகர் சித்தார்த் பதில் !

October 15, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் #Metooஎன்னும் ஹாஸ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை தைரியமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள் தற்போது #MeTooஇயக்கத்தின் மூலம் தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி வருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி,பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை நேரடியாகவே கூறியிருந்தார். இதனால் தமிழ் திரையுலம் பெரும் அதிர்ச்சி அடைந்திருந்தது. பாடகி சின்மயிக்கு நடிகர், நடிகைகள் பலரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாடலாசிரியர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுக் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில், வைரமுத்து எனது அடையாளம். அவரை அசிங்கபடுத்தி சிதைக்க நினைத்தால், எந்த விலை கொடுத்தாவது “நான்” அவரை காப்பாற்றுவேன். சகோதரி பாடகி சின்மயி அவர்கள், அந்த கால கட்டத்தில் அவர் மீது புகார் கூறியிருக்கலாம், அதைவிட்டு விட்டு 15 வருடம் கழித்து பலி கூறுவது என்னால் ஏற்க்க முடியவில்லை. ஆனால் தற்போது #MeTooஒன்று இருப்பதனால் தான், அவர் புகார் தெரிவிகிறார். அப்படி ஒன்று இல்லையென்றால், அவர் புகார் தெரிவிச்சிருப்பாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வைரமுத்து தவறு செய்திருந்தால், அதற்க்கான தண்டனை அவருக்கு வழங்கலாம். அதைச்செய்யாமல் அவரது பெயருக்கு களங்கம் செய்வது தவறு எனக்கூறி வைரமுத்துக்கு ஆதரவா மேலும் சில கருத்துக்கள் கூறியிருந்தார்.
இந்நிலையில், சீமானுக்கு நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

இதுக்குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

சீமான் அவர்கள், “சின்மயி முன்னாடி இத பத்தி பேசிருக்கனும். ஆனால் தன்னோட திருமண நிகழ்ச்சிக்கு வந்த வைரமுத்துக் கூட சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தாங்க” என்று சொல்லிருக்காரு…..
அன்புள்ள சீமான், தன்னோட சொந்த அப்பா, மாமனார்களால வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் பல வருடமா வேற வழியில்லாம, அவங்க கூட பொது இடங்கள்ல சிரிச்சுட்டு இருந்துருக்காங்க. அதுக்கு பேரு பெண்கள் மீது அதிகாரம் செலுத்துவது. இது புரியல? வெக்கக்கேடு.

மேலும் படிக்க