• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பத்து ரூபாய்காக 20 வருடங்கள் பழகிய நண்பனை கொலை செய்த நபர் !

October 13, 2018 தண்டோரா குழு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 10 ரூபாய்க்காக 20 ஆண்டுகள் பழகிய நண்பனை கத்தரிக்கோலால் குத்தி கொலைசெய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியைச் சேர்ந்தவர் அஹிபரான் லால்.இவர் அதே பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார்.இந்நிலையில் இவரது நண்பர் பிரேம்பால் கங்வார் நேற்று மாலை அஹிபரான் லால் கடைக்கு வந்துள்ளார். இருவரும் 20 வருடம் பழக்கமுடையவர்கள்.அப்போது, 10 ரூபாய்க்காக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளத.எனினும் அருகில் இருப்பவர்கள் நண்பர்கள் விளையாட்டாக சண்டை போடுகின்றனர் என நினைத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், இருவருக்கும் இடையே நடந்த வாய்த்தகராறு கைக்கலப்பாக மாறியது.அப்போது,யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பிரேம்பால் அஹிபரானை அடிக்க,ஆத்திரமடைந்த அஹிபரான் கையில் வைத்திருந்த முடிதிருத்தும் கத்தரிக்கோலால் பிரேம்பாலின் நெஞ்சில் வேகமாக குத்தியுள்ளார்.இதற்கிடையில், சண்டையை தடுக்க வந்த பிரேம்பாலின் இரு மகன்களுக்கும் சரமாரியாக கத்திக்குத்து விழுந்துள்ளது.இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரேம்பாலை அங்குள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.ஆனால்,அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து,இது குறித்து அஹிப்ரான் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாகியுள்ள அவரை தேடி வருகின்றனர்.வெறும் பத்து ரூபாய்க்காக 20 வருடம் பழகிய நண்பனை கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க