• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை மற்றும் 1.5லட்சம் பணம் கொள்ளை!

October 13, 2018 தண்டோரா குழு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் மற்றும் 1.5 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கரும்புக்கடை வள்ளலார் நகரை சேர்ந்த கேபிள் டிவி ஆப்ரேட்டர் சேட் என்பவர்,11-ஆம் தேதி காலை மனைவியுடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில்,12-ஆம் தேதி மாலை அருகில் வசிக்கும் சேட்டின் மகள்,வீட்டில் விளக்கு போடுவதற்காக வந்தபோது,வீட்டின் முன்பக்க கதவின் தாழ்பாள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிரிச்சி அடைந்து கணவருக்கும்,அருகிலிருந்தவர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர்,வீட்டின் முதல் மாடியின் ஓர் அறையில் பீரோ உடைக்கப்பட்டு,அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள்,மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.மேலும் வீட்டில் மாட்டப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை திருத்தம் செய்ததுடன்,அதனை திசைதிருப்பி கொள்ளையர்கள் வீட்டிற்குள் வந்ததை உறுதி செய்துள்ள காவல்துறையினர்,வீட்டில் பதிவான கைரேகைகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில்,கொள்ளையடிக்கப்பட்ட அறைக்கு அருகே உள்ள டேபிள் மேல் வைக்கப்பட்டிருந்த நேற்று வசூலான ரூ.12 ஆயிரம் பணம் அப்படியே உள்ளதாகவும், வீட்டில் நிறைய அறைகள் இருந்தும் பணம்,நகை வைக்கப்பட்டுள்ள அறை சரியாக உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.இதனால் இந்த கொள்ளை சம்பவத்தில் யாரேனும் தெரிந்தவர்கள் ஈடுபட்டிருப்பார்களோ என்ற கோணத்திலும் குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க